தேசிய செய்திகள்

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: மேலும் 6 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் இதுவரை 10 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்க கடத்தல் கும்பலுடன் தெடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின.

இதையடுத்து அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்பேது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் சிவசங்கரன் உள்ளார். இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகளான ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், மேலும் 6 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. இதோடு சேர்த்து, தங்கம் கடத்தல் வழக்கில் இதுவரை 10 பேர் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இயகக்கத்தில் தொடர்பு வைத்திருந்ததாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்