தேசிய செய்திகள்

தெலுங்கானா; தடுப்பணையில் குளிக்க சென்ற மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தீயணைப்பு துறையினர் 5 பேரை சடலமாக மீட்ட நிலையில், மாயமான ஒரு மாணவனை தேடி வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டம் நகரை ஒட்டி மன்யார் நதி ஓடுகிறது. கனமழை காரணமாக நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தடுப்பணையில் மழை வெள்ளம் வழிந்து ஓடுகிறது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 8 பேர் குளிப்பதற்காக தடுப்பணைக்கு சென்றிருக்கின்றனர்.

6 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், 2 பேர் கரையில் அமர்ந்திருந்துள்ளனர். நீச்சல் தெரியாத நிலையில், ஆழத்தில் சிக்கி கொண்ட 6 மாணவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததாக, உடன் சென்றவர்கள் வந்து பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளனர்.உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 பேரை சடலமாக மீட்ட நிலையில், மாயமான ஒரு மாணவனை தேடி வருகின்றனர். அவர்கள் விவரம் கோலிபாக கணேஷ் (15) தீகல அஜய் (14), கொங்கா ராகேஷ் (15), ஜடலா வெங்கட சாய் (14) கொங்கா ராகேஷ் (15), ஸ்ரீராம் கிராந்தி குமார் (14) மாணவர்களுக்கு 14 வயதில் இருந்து 16 வயது இருக்கும்.

தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி கே.டி. ராமராவ் சிர்சில்லா குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். மீட்புப் பணிகளுக்காக ஐதராபாத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்