தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர் பகுதியில் இருந்து பள்ளி சிறுவர்கள் உள்பட 60 பேர் மீட்பு

காஷ்மீரில் என்கவுண்ட்டர் பகுதியில் இருந்து பள்ளி சிறுவர்கள் உள்பட 60 பேர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றனர்.

இந்த நிலையில், குல்காம் மாவட்டத்தில் ஆஷ்முஜி பகுதியில் என்கவுண்ட்டர் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பகுதியில் இருந்த பள்ளி சிறுவர்கள் உள்பட 60 பேரை இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் மீட்டு, தங்களுடைய வாகனத்தில் அழைத்து வந்து வேறு இடத்தில் விட்டு சென்றுள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்