தேசிய செய்திகள்

ஜூன் 1-ந் தேதி முதல் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து கிடைக்கும்; மராட்டிய மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

ஜூன் 1-ந் தேதி முதல் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து கிடைக்கும் என மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

2,245 பேருக்கு பாதிப்பு

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு உள்ள நிலையில், வேகமாக பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் புதிய அச்சுறுத்தலாக உருவாகி உள்ளது. இதில் மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் தோபே கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் பரவல் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 245 நோயாளிகள் உள்ளனர். இவர்கள் தவிர மகாத்மா ஜோதிராவ் புலே ஜன் யோஜனா திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற 1,007 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டனர்.

60 ஆயிரம் மருந்து

கருப்பு பூஞ்சை நோய்க்கான முழு சிகிச்சை, மருந்தும் மகாத்மா ஜோதிராவ் ஜன் யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரியிலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆம்போடெரிசின்- பி மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் ஜூன் 1-ந் தேதி முதல் மாநில அரசுக்கு 60 ஆயிரம் மருந்துகள் கிடைக்கும். மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ள மருந்து போக, கூடுதலாக இது கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்