தேசிய செய்திகள்

7 தேசிய கட்சிகளின் 66% வருமானம் அடையாளம் தெரியாத நபர்களிடம் வந்தவை- ஆய்வில் அதிர்ச்சி

7 தேசிய கட்சிகளின் 66 சதவீத வருமானம் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து திரட்டப்பட்டவை என்பது ஆய்வறிக்கை மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், 2 இடதுசாரிக் கட்சிகள், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு 2021-2022ம் ஆண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து 2,172 கேடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும், இது மெத்த வருமானத்தில் 66 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கெடை தெடர்பான சட்டவிதிகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவான தெகையை கணக்கில் தெரிவிக்க வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது. அதுபேலவே 66 சதவீத தெகை திரட்டப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டில், தெரியாத நபர்களிடம் ரூ.1,161 கோடி வருமானம் என பாஜக அறிவித்தது, இது தேசியக் கட்சிகளின் மொத்த வருமானத்தில் 53.45 சதவீதமாகும்.

"பாஜகவின் இந்த வருமானம், மற்ற ஆறு தேசியக் கட்சிகள் அறிவித்துள்ள மொத்த வருமானத்தை விட ரூ.149.86 கோடி அதிகம்.

திரிணாமுல் காங்கிரஸ் ரூ.528 கோடியை தெரியாத நபர்களிடம் இருந்து வருமானமாக வந்ததாக அறிவித்தது, இது தேசியக் கட்சிகளின் மொத்த வருமானத்தில் 24.31 சதவீதமாகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து