தேசிய செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு - சுப்ரீம் கோர்ட்டில் கேரள போலீசார் அறிக்கை தாக்கல்

சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் கேரள போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கில், கேரள போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த அறிக்கையில், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடந்த போராட்டங்கள் தொடர்பாக 2018-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை 67 ஆயிரத்து 94 பேர் மீது 2,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 561 பேர் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதீய ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளையும், மத அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை