தேசிய செய்திகள்

காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது

காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் அரசின் விளையாட்டு துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் பட்காம், புல்வாமா மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் போலி விளையாட்டு சான்றிதழ்களை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளையாட்டு அமைப்புகளில் இருந்து தேசிய அளவில் பெறப்பட்டது போல அவை தயாரிக்கப்பட்டு இருந்தன.

இவ்வாறு போலி சான்றிதழ்கள் கொடுத்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் உள்பட 14 பேரின் நியமனங்களை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இயக்குனரகம் ரத்து செய்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து