தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் 7 கொள்ளையர்கள் கைது; ரூ.1.28 கோடி, போன்கள், வாகனங்கள் பறிமுதல்

தெலுங்கானாவில் கொள்ளை கும்பல்களிடம் இருந்து ரூ.1.28 கோடி, 14 லட்சம் மதிப்பிலான போன்கள் மற்றும் 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம், புதிய வகை போன்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களில் முகமது அப்சார் மற்றும் மிர்சா அஸ்வக் பெய்க் ஆகிய 2 பேரும் சேர்ந்து, ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளரான அசாதுதீன் அகமது என்பவர் வீட்டில் இருந்து ரூ.2.5 கோடி பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களுக்கு உதவியாக முகமது அமீர், இம்ரான் மற்றும் ரெஹ்மான் ஆகிய 3 பேரும் செயல்பட்டு உள்ளனர்.

இதேபோன்று மற்றொரு கொள்ளை சம்பவத்தில் பையதுல்லா கான் மற்றும் சையது மஹபூப் அலி என்ற 2 பேரும் சேர்ந்து ஈடுபட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புடைய 57 புதிய வகை ஸ்மார்ட் போன்கள், இரு சக்கர வாகனம் மற்றும் அவர்களது 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், மற்றொரு கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், வாசிம் அக்ரம் மற்றும் சிராஜ் கான் ஆகியோரிடம் இருந்து 12 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை