கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் - திஜாரா மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிவாடி நகரின் குஷ்கேரா-கரோலி தொழில்துறை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிற்சாலைக்குள் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் சிலர் வெளியே தப்பி ஓடி வந்த நிலையில், 9 பேர் உள்ளே மாட்டிக் கொண்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். இதையடுத்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.