போட்டிகள் தொடங்கிய 3 நாட்களில் மொத்தமும் காலி... ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு

உலகம் முழுவதும் 3 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டதை தொடர்ந்து இலவசமாக 10 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டு இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மிலான்,

இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள் இலவசமாக வழங்கப்படும். இதில் ஆணுறைகளும் அடங்கும்.

வழக்கமாக ஒலிம்பிக் கிராமத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுப்பாடு என்ற புகார்கள் எழும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுபாடு சற்று வித்தியாசமானது. மிலானில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த 3 நாட்களில் அனைத்து ஆணுறைகளும் தீர்ந்துவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. உலகம் முழுவதும் 3 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டதை தொடர்ந்து இலவசமாக 10 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவை அனைத்தும் அங்கு தீர்ந்துவிட்டது.

Also Read
தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
கோப்புப்படம்

1988-ம் ஆண்டு உலகம் முழுவதும் எச்.ஐ.வி. தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் கொடுக்கும் மரபு உருவானது. கடந்த 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வீரர்களுக்கு 3 லட்சம் ஆணுறைகள் கொடுக்கப்பட்டது. 2026-ம் ஆண்டு அதிகபட்சமாக 4.5 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்டன. இதற்கு நேர்மாறாக மிலானில் குறைந்த அளவில் அதாவது வெறும் 10 ஆயிரம்தான் வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஆணுறைகள் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Also Read
நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் - முழு விவரம்
கோப்புப்படம்

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், "ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன்படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும். எதிர்பார்த்ததை விடத் தேவை அதிகமாக உள்ளதால், கூடுதல் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் முடியும் வரை தட்டுப்பாடு வராமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com