தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தின விழா: குஜராத்தில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை இன்று குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தினம், அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். நடை பயண இயக்கம் 75வது சுதந்திர தினம், 2022ல் கொண்டாடப்பட உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தின் துவக்க விழா, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இன்று துவங்குகிறது.

நாட்டின், 75 இடங்களில், 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன.அதைத் தவிர, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து, தண்டிக்கு, 21 நாட்கள் நடை பயண இயக்கத்தையும், மோடி துவக்கி வைக்கிறார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது