தேசிய செய்திகள்

77 நாள் கட்டாய விடுப்புக்கு பின்னர் சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்பு

77 நாள் கட்டாய விடுப்புக்கு பின்னர் சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனையடுத்து அலோக் வர்மாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி இரவு மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவையும் அரசு நியமித்தது.

கட்டாய விடுமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலோக் வர்மாவின் அதிகார பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்கு காரணமான மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தனர். மேலும் இடைக்கால இயக்குனர் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.

கோர்ட்டு உத்தரவால் சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா செயல்படுவதில் தடை நீங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா, நேற்று மீண்டும் அலுவலகம் வந்து பதவி ஏற்றுக்கொண்டார். இவரது 2 ஆண்டு பதவிக்காலம், வருகிற 31-ந் தேதியோடு நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்