புதுடெல்லி,
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காந்தியின் நினைவு தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.