புதுடெல்லி,
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக தலைமறைவாக இருந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை காவல்துறை இன்று கைது செய்தது.
இந்நிலையில் டெல்லி குடியரசு தின வன்முறை வழக்கில் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக நடிகர் தீப் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நடிகர் தீப் சித்து தலைமறைவானதை தொடர்ந்து, அவரைக் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி போலீசாரால் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.