தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலி; 4 பேர் காயம்

உத்தரகாண்டில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியாகினர்.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ்-கேதர்நாத் தேசிய நெடுஞ்சாலையில் பன்ஸ்வாடா பகுதியருகே சார் தாம் என்ற கட்டுமான பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் இங்கு திடீரென நில சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்து மூத்த அதிகாரிள் அங்கு உடனடியாக சென்றனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை