தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரால் நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மர் பகுதியில்  நக்சலைட்டுகள்  நடமாட்டம் உள்ளதாக  பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.  உடனடியாக  போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஒரு பாதுகாப்பு படை வீரருக்கு காயம் ஏற்பட்டது.

அதேபோல், நாராயண்பூர் மாவட்டத்திலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. சுக்மா, தந்தேவாடா, நாராயண்பூர்,கான்கேர் ஆகிய 4 மாவட்டங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?