தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஆட்டோ மீது மினி வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலி

பிம்பல்கான் ஜோகாவிற்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் எதிரே வந்த ஆட்டோ மீது அதிபயங்கரமாக மோதியது.

தினத்தந்தி

மும்பை,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மினி வேன் மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை நோக்கி சென்று கொண்டிருந்தது. புனே மாவட்டத்தில் உள்ள பிம்பல்கான் ஜோகாவிற்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் எதிரே வந்த ஆட்டோ மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோரவிபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பேர், மினி வேன் டிரைவர் என மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு