தேசிய செய்திகள்

84-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை

84-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தான் எதைப்பற்றி பேச வேண்டும்? என நாட்டு மக்களிடம் அவர் அடிக்கடி யோசனையும் கேட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை காலை 11 மணிக்கு நடக்க இருக்கிறது. இதில் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்ற உள்ளார். இது 84-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு