தேசிய செய்திகள்

உ.பி. இறுதிகட்ட தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

உத்தரபிரதேசத்தில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமிருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி அங்கு 8.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை தொகுதி வாரியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம்:-

மவு (9.99%), ஜான்பூர் (8.99%), வாரணாசி (8.93%), ஆஜம்கர் - (8.08%); காஜிபூர் - (7.95%); சண்டௌலி - (7.69%), மிர்சாபூர் - (8.84%), பதோஹி - (7.43%) மற்றும் சோன்பத்ரா - (8.35%) தொகுதிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு