புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன்பின்னர் கடந்த ஜூனில் இருந்து 18 வயது கடந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 86 கோடியே 1 லட்சத்து 59 ஆயிரத்து 11 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.