பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்ரோரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் என பாகுபாடின்றி தனது தாக்குதலை கொரோனா தொடுத்து வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கர்நாடகாவில் இன்று மேலும் 8,642 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,49,590 ஆக உய்ர்ந்துள்ளது.
இன்று மேலும் 126 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,327 ஆக உயர்ந்துள்ளது
மேலும் மாநிலத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 7,201 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,150 ஆக உள்ளது. தற்போது வரை 81,097 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.