Image courtesy : ndtv.com 
தேசிய செய்திகள்

குஜராத்தில் கோர விபத்து: தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 15 பேர் பலி ;பிரதமர் மோடி இரங்கல்

குஜராத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 15 பேர் பலி ஆனார்கள்.பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சூரத்,

குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் இன்று அதிகாலை சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது.

பின்னர் லாரி சாலையோரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் அறிவித்துள்ளார்.