தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் 9% சிறு, குறு நிறுவனங்கள் மூடல் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் பொருளாதாரம் பலவீனம் அடைந்ததாகவும், வேலை இழப்பு ஏற்பட்டதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 16-ந்தேதி, மக்களவையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பாக நான் கேள்விகள் எழுப்பினேன். அவற்றுக்கு மத்திய அரசு தரப்பில் அளித்த பதில்களில், கொரோனா காலத்தில் 9 சதவீத சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதாக ஒப்புக்கொண்டனர். பொருளாதாரம் பலவீனம் அடைந்ததாகவும், வேலை இழப்பு ஏற்பட்டதாகவும் தான் இதற்கு அர்த்தம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து