தேசிய செய்திகள்

மத்தியப் பிரதேசம்: 9 ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா

ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தூர்,

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியில் பங்கேற்ற ஒன்பது ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் பி எஸ் சைத்யா கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் சமீபத்தில் மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

அதிகாரிகள் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்புதான் இங்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்று அவர் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்