தேசிய செய்திகள்

9 ஆண்டுகள் மாமனார் ஆபாச கொடுமை...! வீடியோ எடுத்து சிறைக்கு அனுப்பிய மருமகள்...!

மாமனார் மற்றும் மைத்துனர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

பஸ்தி

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் ஒரு பெண் தனது மாமனாரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்து உள்ளார்.மேலும் தனக்கு மூன்று மகள்கள் இருப்பதாகவும் ஒருவர் தனது மாமனாருக்கும், இரண்டு பேர் தனது கணவருக்கும் பிறந்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் பரவுலி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இதை பயன்படுத்திக்கொண்ட மாமனார் அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அந்த பெண் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாமனாரின் இந்த கேவலமான செயலை அந்த பெண் வீடியோ எடுத்து போலீசில் காட்டியுள்ளார். இதையடுத்து மாமனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மாமனார் சிறைக்கு சென்ற பிறகு, தனது கணவரின் சகோதரர் தன் மீது அருவருப்பான பார்வையை வீசியதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். கணவரின் சகோதரர் பலமுறை பலவந்தமாக அவளுடன் உறவு வைத்துள்ளார். இதுகுறித்த  வீடியோவுடன் காவல்நிலையம் சென்றதாகவும், ஆனால் இதையும் மீறி போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் அந்த பெண் கூறி உள்ளார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபேந்திர சவுத்ரி இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.பெண் அளித்த வீடியோவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு