தேசிய செய்திகள்

செப்டம்பர் 11, மனித குலத்தின் மீதான தாக்குதல் நாள்: மோடி

உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தாக்குதலின் 20-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தினத்தந்தி

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகத்தின் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் விமானங்களை மோதி மிகக்கொடூரமான தாக்குதல் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தாக்குதலின் 20-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதை பிரதமர் மோடி உருக்கமுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

இதையொட்டி அவர் கூறுகையில், செப்டம்பர் 11-ந் தேதி, உலக வரலாற்றில் மனித குலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாளாக நினைவுகூரப்படும். ஆனால் அதே நாள் மனிதாபிமான மதிப்பீடுகள் பற்றியும் நமக்கு கற்றுத்தந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதே நாளில் 1893-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோ நகரில் உலக மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் மனித மதிப்பீடுகள் பற்றி பேசி உலகை வியப்பில் ஆழ்த்தியதையும் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்