கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

2-வது டோஸ் செலுத்திய பிறகு 9 முதல் 12 மாதத்துக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி..?

2-வது டோஸ் தடுப்பூசிக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் இடையிலான இடைவெளி 9 முதல் 12 மாதங்களாக இருக்கலாம் என தெரிகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளது. அதனால், ஜனவரி 10-ந் தேதி முதல், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முதலில், முன்கள, சுகாதார பணியாளர்களுக்கும், 60 வயதை தாண்டியவர்கள் மற்றும் இணை நோய் கொண்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நாட்டில் 18 வயதை தாண்டிய 61 சதவீதம்பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 90 சதவீதம்பேர், முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், 2-வது டோஸ் செலுத்திய பிறகு எவ்வளவு இடைவெளியில் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப நிபுணர் குழு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, 2-வது டோசுக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் இடையிலான இடைவெளி 9 முதல் 12 மாதங்கள்வரை இருக்க வாய்ப்புள்ளது. கோவேக்சின், கோவிஷீல்டு என ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு இடைவெளி நிர்ணயிக்கலாம் என்று நிபுணர் குழு ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை