தேசிய செய்திகள்

91-வது பிறந்த நாள்: எல்.கே.அத்வானிக்கு, பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

எல்.கே.அத்வானியின் 91-வது பிறந்த நாளான நேற்று, பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி நேற்று தனது 91-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானியின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானிஜி ஆற்றிய பங்களிப்பு நினைவுச்சின்னமாக ஜொலிக்கிறது. அவர் வகுத்த எதிர்கால திட்டங்கள் மற்றும் மக்கள் ஆதரவு கொள்கைகளால் அவரது மந்திரி பதவி பாராட்டு பெற்றது என்று குறிப்பிட்டு இருந்தார்.

தனது தன்னலமற்ற மற்றும் விடாமுயற்சியான பணிகளால் பா.ஜனதாவுக்கு தொண்டாற்றியதாக எல்.கே.அத்வானியை பாராட்டிய மோடி, கட்சியின் நீண்டகால தலைவராக அவர் செயல்படுவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதைப்போல பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் எல்.கே.அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். பா.ஜனதாவை கட்டமைப்பதில் எல்.கே.அத்வானி மேற்கொண்ட அயராத பணிகளையும் அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.


புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு