நாடாளுமன்ற மேலவையில் உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹீர் கேள்வி ஒன்றிற்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில், 2017ம் ஆண்டில் (ஜூன் வரை) இடதுசாரி தீவிரவாதிகளால் பொதுமக்களில் 94 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் பழங்குடியின மக்கள். போலீசாருக்கு தகவல் அளிப்பவர்கள் என அவர்கள் மீது தீவிரவாதிகள் குற்றம் சாட்டி இந்த படுகொலைகளை செய்துள்ளனர்.
அவர்களை கொல்வதற்கு முன் பல்வேறு கொடுமைகளை செய்துள்ளனர். தங்களது யுக்திகளாக துப்பாக்கிகளை கொண்டு சுடுதல், பலமுறை அடித்தல் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் ஆகியவற்றை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சட்டீஸ்காரில் இதுவரை தலை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்ட தகவல் எதுவும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.