தேசிய செய்திகள்

குஜராத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

குஜராத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு சிக்கி உள்ளது.

வதோதரா,

குஜராத்தின் வதோதரா மாவட்டத்துக்கு உட்பட்ட வெஜல்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர் அது அங்கு வளர்க்கப்பட்ட பூனை ஒன்றை பிடித்து விழுங்க முயன்றது.

எனினும் பூனையை மலைப்பாம்பால் விழுங்க முடியவில்லை. இதனால் தவித்துக்கொண்டிருந்த பாம்பை அக்கம்பக்கத்தினர் கண்டு சத்தம் போட்டனர். மேலும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். மக்கள் கூட்டத்தை பார்த்ததும் பூனையை போட்டுவிட்டு மலைப்பாம்பு தப்பி ஓட முயன்றது.

அதற்குள் வனத்துறையினர் அங்கு வந்து, அப்பகுதி மக்களுடன் இணைந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அது 9 அடி நீளம் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பை எடுத்துச்சென்ற அவர்கள், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பத்திரமாக விட்டு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...