வடோதரா,
குஜராத் மாநிலம் வடோதராவில் பார்த்தி பள்ளி உள்ளது. அதில், 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவன், நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்தான். முதல் மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அவன் சென்று கொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் அவனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். அதில் அவன் உயிரிழந்தான். அவனது உடலை பள்ளியின் கழிவறையில் போட்டு விட்டு தப்பிச்சென்றனர். பள்ளி பையை மற்றொரு இடத்தில் வீசினர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவன் உடலில் 10 குத்திக்குத்து காயங்கள் இருந்தன. கொலை பற்றி கேள்விப்பட்டவுடன், பள்ளி முன்பு ஏராளமானோர் கூடினர்.
கொல்லப்பட்ட மாணவன், ஒரு வாரத்துக்கு முன்புதான் அப்பள்ளியில் சேர்ந்தான். அவனுடைய பெற்றோர் ஆனந்த் நகரில் வசிக்கிறார்கள். தனது தாய்மாமா வீட்டில் தங்கியபடி அவன் பள்ளிக்கு சென்று வந்தான்.