சாமனூர் சிவசங்கர் அப்பா மருத்துவ அறிவியல் மையத்தின் மருத்துவ இயக்குனர், மருத்துவர் கலப்பனாவர் 
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு பின் முதன்முறையாக 13 வயது சிறுவனுக்கு அரிய வியாதியால் பாதிப்பு

கர்நாடகாவில் கொரோனாவுக்கு பின்பு ஏற்பட்ட அரிய வியாதிக்கு சிகிச்சை அளித்து 13 வயது சிறுவனை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.

தேவநாகரி,

கர்நாடகாவின் தேவநாகரி மாவட்டத்தில் வசித்து வரும் 13 வயது சிறுவனுக்கு முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் அறிகுறிகளாக அதிக அளவு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் சுவாச பாதிப்பு ஆகியவை ஒரே நாளில் ஏற்பட்டு உள்ளது.

இதனால் அச்சமடைந்த அவனது பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதில், கொரோனா பாதிப்புக்கு பின்னர் சிறுவனின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி சாமனூர் சிவசங்கர் அப்பா மருத்துவ அறிவியல் மையத்தின் மருத்துவ இயக்குனரான மருத்துவர் கலப்பனாவர் கூறும்போது, சிறுவனுக்கு அக்யூட் நெக்ரோடைசிங் என்செபலோபதி என்ற அரிய வகை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், கடந்த ஒரு வாரம் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். கொரோனா பாதிப்புக்கு பின்பு இந்த வகை வியாதியால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதற்கு தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான ஆபத்து தவிர்க்கப்படும் என கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு