தேசிய செய்திகள்

மராட்டியத்தில் எச்3என்2 காய்ச்சலுக்கு முதியவர் பலி

மராட்டியத்தில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு 73 வயது முதியவர் உயிரிழந்தார்.

புதுடெல்லி,

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

மார்ச் 8-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததாகவும், தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மராட்டியத்தில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு 73 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் இதயத்தில் பிரச்சினை இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...