திருச்சூர்,
கேரளாவின் திருச்சூரில் வெள்ளிகுளங்கரா பகுதியை சேர்ந்தவர் செரியா குட்டி (வயது 91). இவரது மனைவி முக்கட்டுவீட்டில் கொச்சுதிரேசியா (வயது 87).
இந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் உள்ளனர். ஆனால் வெள்ளிகுளங்கரா பகுதியில் தனியே வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 27ந்தேதி முதியவரின் மனைவி காணாமல் போயுள்ளார். இதுபற்றி அடுத்த நாள் அவர்களது மகன் ஜோபி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையில், இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர் என அருகில் வசித்தவர்கள் கூறியதில் இருந்து தெரிய வந்தது.
முதியவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப விவகாரம் கொலையில் முடிந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் மனைவியின் உடலை குற்றவாளியான முதியவர் எரித்து உள்ளார்.
இதனை அடுத்து முதியவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.