கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவரை கொடூரமாக கடித்து கொன்ற முதலை

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் முதலை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக கரைக்கு திரும்பினர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் தூதகங்கா ஆறு ஓடுகிறது. நேற்று காலையில் இந்த ஆற்றில் குளிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவா புண்ணப்பா(வயது 72) என்ற முதியவர் சென்றார். அங்கு ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஆற்றில் முதலை வந்தது. ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் முதலை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக கரைக்கு திரும்பினர். முதியவரும் கரைக்கு திரும்புவதற்குள் அவரை முதலை கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. முதலையின் பிடியில் சிக்கிய முதியவர் அலறினார். ஆனால் அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. முதலையின் கொடூர கடியால் பலத்த காயமடைந்த மகாதேவா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டனர். இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை