தேசிய செய்திகள்

ஜம்மு சர்வதேச எல்லையில் வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஜம்முவின் சர்வதேச எல்லை பகுதியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஜம்மு,

ஜம்முவின் கன்சுக் பகுதியில் உள்ள சம்பா சர்வதேச எல்லையில் சக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன், சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றி வந்த ஆளில்லா விமானம் ஒன்றை போலீசார் நேற்று அதிகாலை சுட்டு வீழ்த்தினர்.

இந்திய பகுதிக்குள் 8 கி.மீ. துரம் பறந்து வந்த ஆளில்லா விமானம், தாக்குதல் நடத்துவதற்காக கீழே இறங்கியபோது அதனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

அந்த ஆளில்லா விமானத்தில் 5 கிலோ எடை உடைய வெடிபொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அது சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. அந்த வெடிபொருட்களை கைப்பற்றி, அவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்