தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 2,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் இன்று மேலும் 2,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று புதிதாக 2,655 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 84,759 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 2,433 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 220 பேருக்கு யார் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. மேலும் 38 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், 114 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று 2,111 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை மொத்தம் 62,559 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 21,800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்