தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 88,600 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை தொடர்ந்து 2-ம் இடத்தில் நீடிக்கும் இந்தியா, புதிய பாதிப்புகள் மற்றும் குணமடைவோர் எண்ணிக்கையில் தினமும் கணிசமான அளவை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,124 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94,503 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நெற்று 92,043 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் இதுவரை 49,41,628 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் 9,56,402 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,87,861 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 7,12,57,836 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்