தேசிய செய்திகள்

கட்சி, ஆட்சி அதிகாரத்தில் 2 பேர் ஆதிக்கம் ஏன்?" பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி

பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன் என ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

புதுடெல்லி,

பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று செல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலேங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன் என ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேரியுள்ளது.

இதுதெடர்பாக பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தித் தெடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, குதிரைப் பேரம், கும்பலாக மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை அக்கட்சியில் இருந்து உடைத்து வெளியேற்றுவது மற்றும் அரசியல் சாசன அமைப்புகளை கைப்பற்றுவது மட்டும் தான் பா.ஜ.க. மரபா என மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நேரு-காந்தி மீதான வெறுக்கத்தக்க வெறுப்பில் பா.ஜ.க. ஏன் வெறித்தனமாக இருக்கிறது? என விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேட்டுக் கெண்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு