தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.31 லட்சம் மதிப்புள்ள லாரி காணிக்கை

லாரியின் சாவியை தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் சி.வெங்கையா சவுத்ரியிடம் முறையாக ஒப்படைத்தார்.

திருமலை,

கனரக வாகன முன்னணி உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்டு நிறுவனம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு லாரி ஒன்றை காணிக்கையாக வழங்கி உள்ளது. இதன் மதிப்பு ரூ.31 லட்சத்து 72 ஆயிரத்து 532 ஆகும்.

தேவஸ்தானம்

ஏழுமலையான் கோவில் முன்பு நடந்த நிகழ்ச்சியில், அசோக் லேலண்டு நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் குமார் வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, லாரியின் சாவியை தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் சி.வெங்கையா சவுத்ரியிடம் முறையாக ஒப்படைத்தார். நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து பிரிவு பொறுப்பு பொது மேலாளர் லட்சுமி பிரசன்னா மற்றும் திருமலை போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT