பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. விஜயபுராவில் உள்ள தனார்கி என்ற இடத்தில் இருந்து 2.9 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மிகவும் குறைந்த அளவில் இருந்ததாகவும், இது போன்ற நில அதிர்வுகளால் பெருமளவு பாதிப்புகள் ஏற்படாது எனவும் புவியியல் ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இன்றோடு கர்நாடகத்தில் இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 7-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.