தேசிய செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர் மீண்டும் கற்பழிப்பு வழக்கில் கைதானார்

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர், மீண்டும் கற்பழிப்பு வழக்கில் கைதானார்.

தினத்தந்தி

ராஜ்கோட்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் சாமுண்ட நகரைச் சேர்ந்தவர், ராதோத் (வயது 40). கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்ததாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. தண்டனையை அனுபவித்து வந்த அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார்.

ஏற்கனவே கற்பழித்த சிறுமியை அவர் மீண்டும் தேடிச் சென்றார். அந்த சிறுமி பருவமடைந்து 19 வயது இளம்பெண்ணாக இருக்கிறார். அந்த பெண்ணை பார்த்ததும் அவருக்கு காமம் கண்ணை மறைத்தது. அருகே நெருங்க, அவளோ அலற, சப்தம் போட்டால் உன் தந்தையையும், சகோதரனையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி மீண்டும் அந்தப் பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பிவிட்டார்.

தற்போது அந்த பெண்ணிடம் வந்து என்னை திருமணம் செய்து கொள். என் மீது உள்ள வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் அவள் ஒப்புக் கொள்ளவில்லை. பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். போலீசார் மீண்டும் ராதோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்