தேசிய செய்திகள்

ஆக்ரா அருகே மிக்-29 போர் விமானம் விபத்து

ஆக்ரா அருகே மிக்-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்தது.

தினத்தந்தி

ஆக்ரா,

ரஷிய தயாரிப்பு மிக் 29 ரக விமானங்கள் விமானப்படையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே சோங்கா கிராமத்தில் மிக் 29 ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் விமானி துரிதமாக செயல்பட்டு பாராசூட் மூலமாக கிழே குதித்து உயிர் தப்பினார்.

பஞ்சாப் மாநிலம் அடம்பூரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானம் ஆக்ரா அருகே தீப்பிடித்து எரிந்ததாகவும் இதில் விமானி உயிர் தப்பியதாகவும் மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ராஜஸ்தான் பகுதியில் இதே மிக் 29 ரக விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 மாதங்களில் நடக்கும் 2-வது விபத்து இதுவாகும்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்