தேசிய செய்திகள்

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நடமாடும் போலீஸ் நிலையம்

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நடமாடும் போலீஸ் நிலையம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக ஒரு வேன், போலீஸ் நிலைய வடிவமைப்பில் மாற்றப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் உட்காருவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் போலீசாருடன் சாதாரண போலீஸ் நிலையம் போல இது செயல்படும்.

இதில் இன்டர்நெட் வசதி மற்றும் மாநாட்டின் முக்கிய செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் இது, எங்காவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு உடனடியாக இந்த போலீஸ் நிலையம் சென்றடையும். இந்த நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்