ராய்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டம் குத்ரு- கேதுல்னார் வனப்பகுதியில் மாலை 4.30 மணியளவில் பாதுகாப்புப்படையினருக்கும் நக்சலைட்டுக்கும் இடையில் கடும் துப்பாக்சிச் சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் நக்சல் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல் தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தகவலை பிஜபுர் எஸ்.பி. கம்லோசன் காஷ்யத் தெரிவித்தார்.