தேசிய செய்திகள்

பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

டிரோன் விழுந்த இடத்தை தேடிப் பிடித்தபோது அதில் 2.70 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது கைப்பற்றப்பட்டது.

சண்டிகார்,

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே டானோய் குர்டு கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஒரு மர்ம டிரோன் நுழைந்தது.

அதன் சத்தத்தை கேட்டதும் விழிப்படைந்த எல்லை காவல்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த டிரோன் வீழ்த்தப்பட்டது. டிரோன் விழுந்த இடத்தை தேடிப் பிடித்தபோது அதில் 2.70 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது கைப்பற்றப்பட்டது. 

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை