தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் குரங்கு அம்மை அறிகுறி என அனுமதிக்கப்பட்டவருக்கு பாதிப்பில்லை என தகவல்

கொல்கத்தாவில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு பாதிப்பில்லை என ஆய்வு முடிகள் வந்துள்ளது.

கொல்கத்தா,

கொல்கத்தா, மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐரோப்பாவில் படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.அவருக்கு சரும அரிப்பு, கொப்புளங்கள், தோல் தடுப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இளைஞருக்கு எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. அதில் அந்த இளைஞருக்கு குரங்கு அம்மை நெகட்டிவ் என வந்துள்ளது. அவருக்கு சிக்கன் குனியா சிகிச்சை அளிக்கப்படும் எனவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...