தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயிலில் பிச்சை எடுத்த நபருக்கு ரூ.500 அபராதம்

மெட்ரோ ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு,

மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் பிச்சைக்காரர்கள் அழுக்கு உடையில் செல்ல முடியாது என்பதால் ஒரு பிச்சைக்காரர் டிப்-டாப் உடையில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து, மெட்ரோ ரெயிலில் பயணித்து பயணிகளிடம் யாசகம் பெற்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

ஆம், டிப்-டாப் உடையில் பயணி போல் மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து யஷ்வந்தபுரத்துக்கு செல்ல டிக்கெட் எடுத்த அந்த நபர், ரெயில் ஏறி பயணத்தை தொடங்கியதும் பயணிகளிடம் பிச்சை கேட்டு யாசகம் பெற்றார். நான் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி, எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறி துண்டு சீட்டை பயணிகளிடம் கொடுத்து, அதன்மூலம் அவர் யாசகம் பெற்றார்.

இதைக்கண்ட மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் அவரை பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர். இதற்கிடையே இதை மெட்ரோ ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்