தேசிய செய்திகள்

நடு ரோட்டில் வைத்து ஆட்டோ ஓட்டுனரை சரமாரி தாக்கிய காவலர் - அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

நடு ரோட்டில் வைத்து ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பேது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் கோபமடைந்த காவலர் ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அருகில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வேகமாக வைரலாகியது வீடியோ பரவியநிலையில் உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவலரை பணியிடை நீக்கம் செய்து மாண்டியா காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்