லூதியானா,
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநில செயலாளராக இருந்தவர் குல்வந்த் சிங் சித்து. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் அவர் சேர்ந்துள்ளார். தனது அரசியல் பயணத்தில் காங்கிரசில் இளைஞரணி தலைவராக இருந்து அதன்பின்னர் பல்வேறு பதவிகளையும் சித்து வகித்துள்ளார். இந்த சூழலில் அவர் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளது காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.